சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூரில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி (12) ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன் பள்ளிக்கு செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார். ஆனால் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த  அடைந்த பெற்றோர் அருகில் உள்ள திரு .வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியின் செல்போன் சிக்னல் மூலம் மாணவி இருக்கும் இடம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்துள்ளனர். அப்போதுதான் அந்த மாணவியின் தோழிகளுடன் சேர்ந்து மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது.

அதே பகுதியை சேர்ந்த 9 வகுப்பு படித்து விட்டு எண்ணூரில் லேப் டெக்னீஷனாக வேலை செய்யும் சிறுமி (14), வில்லிவாக்கத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி (16) ஆகியோர். இது குறித்த விசாரணையில் சிறுமிகள் மூன்று பேரையும் பெரம்பூர் அடுத்த அகரம் செங்கல்பராயணம் பகுதியை சேர்ந்த ஐடிஐ மாணவர் அபிஷேக் (19), கலி முல்லா (21), மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் சேர்ந்து காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதற்கு உடந்தையாக சையத் முகமது ஜாபர்(22) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளதும் தெரியவந்தது. 3 சிறுமிகளையும் பெரம்பூர் வீனஸ் அருகே உள்ள அரசு நூலகத்தின் மாடிக்கு அழைத்து சென்று மூன்று மாணவிகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அபிஷேக் கலிமுல்லா மற்றும் முகமது ஜாபர் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் சிறுவர்கள் மூன்று பேரையும் முத்தியால்பேட்டையில் உள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளனர். சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.