
திருவள்ளூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 30 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவின்போது ஜோடிகளுக்கு கட்டில் பீரோ என 60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் மற்றும் 4 கிராம் தங்க தாலி போன்றவைகள் வழங்கப்பட்டது. இன்று காதலர் தினத்தில் திருமணம் நடந்தது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் காதலர் தினம் பற்றி அங்கிருந்தவர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கூறியதாவது,காதலர் தினம் என்ற வார்த்தையை கூறினாலே சிலருக்கு பிடிக்காது. இதைப் பற்றி பேசினால் அவர்களுக்கு கோபம் தான் வரும். அதற்காக பேசாமல் இருக்க முடியுமா. காதலர் தினத்தை தான் கொண்டாடாமல் இருக்க முடியுமா.? ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான். இங்கு இருக்கக்கூடிய உங்கள் அனைவரின் சார்பாக நான் திருமணம் முடிந்த 30 ஜோடிகளுக்கும் கேட்டுக்கொள்வது எப்போதும் அன்பு மற்றும் காதலோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான். மேலும் இன்று காதலர் தினத்தில் திருமணம் நடந்தது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது என்று கூறினார்.