
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, விடியா திமுக அரசாங்கம் தான், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு…. நாங்கள், அம்மாவினுடைய அரசு…. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்திற்கு மாண்புமிகு அம்மா பெயரை சூட்டினோம். அதை பொறுக்க முடியாமல்…. ஏற்கனவே சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு கொண்டு வந்தார்கள்…
ஆரம்ப நிலையிலேயே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் சகோதரர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார். ஆரம்ப கட்டத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தார். அதைத்தான் நாங்கள் பதிவு செய்திருக்கின்றோம்.
1994ஜனவரி மாசம்…. 29 ஆண்டுகளுக்கு முன்பாகவே, வேந்தர் நியமனம் குறித்து நாங்க தான் கொண்டு வந்தோம். இவுங்க ஒன்னும் கொண்டு வரல. இதுதான் இவ்வளவு நேரம் படிச்சேன். அப்போ எல்லாம் திமுகவின் நிலைப்பாடு என்ன ? என்பதை அப்பொழுது அமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன் அவர்களும் தெரிவித்திருக்கிறார்கள்…
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் கலைஞர் அவர்களும் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். இன்னைக்கு மூச்சுக்கு 300 தடவை இன்றைய முதலமைச்சர் பேசுறாரு…. கலைஞருடைய ஆட்சி தான் நடக்குது…. கலைஞருடைய திட்டத்தை தான் நடைமுறைப்படுத்துகிறோம்…. அப்படின்னா, கலைஞர் வேற மாதிரி அல்லவா பேசி இருக்காரு… வேற கருத்துதான் சொல்லி இருக்காரு… இப்ப இருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய தலைவர் ( (கலைஞருக்கு) எதிர்ப்பாக செய்கிறாரா ? சொல்லுங்க பாக்கலாம் என தெரிவித்தார்.