ஜார்கண்ட் மாநிலத்தில் எர்ணாகுளம் செல்லும் ரயில் ஒன்றில் கழிவறை ஒன்று பூட்டப்பட்டு இருந்த நிலையில் அந்த கழிவறை உள்ளே ஆட்கள் இருக்கும் சத்தம் கேட்டது. அரக்கோணம் ரயில் நிலையம் வந்தபோது அதிகாரிகள் கதவை உடைத்து கழிவறை உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் 31 மணி நேரம் ரயில் கழிவறையில் தண்ணீர் மற்றும் உணவு அருந்தாமல் பயணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரை மீட்டு கீழ்பாக்க மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இந்த சம்பவம் சற்று பரபரப்பை கிளப்பியுள்ளது.