
கோவையை சேர்ந்த விநாயகம் என்பவர் விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டதால் பணியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தனது தாய் பாப்பம்மாள் பராமரிப்பில் இருந்து வந்த விநாயகம் 1991 ஆம் ஆண்டு முதல் காணவில்லை. அதன் பிறகு ஆயுள் சான்று சமர்ப்பிக்க படாததால் மகனுக்கான ஓய்வு ஊதியம் தாய் பாப்பம்மாளுக்கு நிறுத்தப்பட்டு அவர் வறுமையில் வாடி வந்துள்ளார்.
இதனிடையே சென்னை திருமூனை வாயிலில் அமைந்துள்ள ஒரு கோவில் வாசலில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த விநாயகத்தை உறவினர்கள் கண்டுபிடித்து தாயுடன் சேர்த்து வைத்துள்ளனர். மேலும் விமானப்படை முன்னாள் ஊழியர் சங்கத்தினர் உரிய சான்றிதழ்களை தயார் செய்து சமர்ப்பித்ததால் மீண்டும் விநாயகத்திற்கு ஓய்வூதியம் கிடைக்க தொடங்கியுள்ளது. இதில் காணாமல் போன விமானப்படை அதிகாரியான விநாயகம் 33 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயுடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.