செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, முதல்ல  மக்கள் தொகைக்கான கணக்கெடுப்பு  முடிய வேண்டும். அதற்கு பிறகு ஒவ்வொரு தொகுதிக்கான மறு சீரமைப்பு  நடந்து முடிவுபெற்ற பிறகு தான், மகளிருக்காக 33% இடஒதுக்கிடு  செயல்முறைக்கு கொண்டுவரப்படும் அப்படினு சொல்லும்பொழுது…   எத்தனை ஆண்டுகள் இதுக்கு ஆகும் ? அப்படிங்குறது யாராலுமே குறிப்பிட்டு சொல்ல முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது.

இதைத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்களும் அவர்களுடைய அறிக்கையிலே குறிப்பிட்டு சொல்லிருக்கிறார்கள். இது எல்லாம் என்று நிறைவேற்றப்பட்டு,  என்று அமலுக்கு கொண்டு வரப்படும் என்ற மிக பெரிய ஒரு கேள்வி எல்லாருக்கும் இருக்கிறது. அதனால இது ஒரு கண்துடைப்பாக தான் தோன்றுகிறது. தேர்தலுக்கு முன்னாடி பெண்களை ஏமாற்றுவதற்கான ஒரு கண்துடைப்பாக தான் தோணும். 

திமுகவில் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, திராவிட முன்னேற்ற கழகம் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்லுவதற்கு காரணம் இது தான்.  கூட்டணி கட்சிகள் இருக்கு. யாருக்கு என்ன தொகுதி ? அப்படிங்குறதை எல்லாம் தலைமை முடிவு செய்ய வேண்டும். கூட்டணி கட்சிகளோடு ஆலோசனை செய்து முடிவு செய்ய வேண்டும். அதுனால தன்னிச்சையாக யாருமே இப்படி ஒரு அறிவிப்பை செய்ய முடியாது ஒரு சூழ்நிலை இருக்குது என தெரிவித்தார்.