வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 154 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்களும் எடுத்தன. அடுத்ததாக 9 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 66.1 ஓவர்கள் தாக்குப்பிடித்து 244 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதனை அடுத்து பாகிஸ்தான் பேட்டிங் செய்ய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 133 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிவாகை சூடியது.

1990 இல் பாகிஸ்தானின் பைசாபத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வென்றது. அதன் பிறகு 35 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனை மிகப்பெரிய வெற்றியாக வெஸ்ட் இண்டீஸ் அணி கொண்டாடி வருகிறது.