
தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இன்று ஜனவரி 24ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் ஆகிய பாடங்களுக்கு சுமார் 3,548 ஆசிரியர்கள் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ஆசிரியராக விருப்பமுள்ளவர்கள் ஜனவரி 24ஆம் தேதி சென்னை மாண்ட் போர்ட் மெட்ரிக் பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.