தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீசானது. இதில் பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில்  விஜய் சேத்துபதி  வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வேதாந்த் என்ற இளைஞர் தனது 36 தோழிகள், 72 முன்னாள் தோழிகள், 80 நண்பர்களுடன் ‘ஜவான்’ படத்திற்கு சென்றுள்ளார். 188 டிக்கெட்டுகளை காகித மாலையாக இளைஞர் கழுத்தில் போட்டுக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜவான் படம் இதுவரை உலகம் முழுவதும் 129 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.