ஆஸ்திரேலிய யூடியூபர் நார்மே என்பவர் 38 மணி நேரம் அசையாமல் நின்று உலக சாதனை படைத்துள்ளார். அவர் கடந்த ஆண்டு அதிக நேரம் தூக்கமின்றி இருப்பதற்கான உலக சாதனையை முறியடிக்க முயன்றார். இதற்காக 264 மணி நேரம் விழிக்க முயன்ற நிலையில் அவருக்கு ஹாலூசினேஷன் மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் யூடியூப் அவரது லைவ் ஸ்ட்ரீமை முடக்கியது. இதைத் தொடர்ந்து இவர் 2025-ல் அசையாமல் அதிக நேரம் நிற்கும் ஒரு புதிய சாதனை முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக ஒரு சாலையின் ஓரத்தில் 38 மணி நேரம் நின்று சாதனை செய்தார்.

அப்போது அங்குள்ள பலர் அவரை எதிர்த்து பத்திரிக்கையில் வரைந்து, முட்டை உடைத்து மற்றும் மஸ்டார்ட் தடவி துன்புறுத்தினார்கள் . இன்னும் சிலர் அவரது ஜாக்கெட்டில் ஸ்பிரே பேண்ட் செய்ததுடன் தொப்பியை தலையில் வைத்து அவரை கிண்டல் செய்தனர். ஒரு பெண் அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

இப்படி பல பிரச்சினைகள் இருந்த போதும் அவர் எந்தவித சலனமும் இன்றி 38 மணி நேரம் நிற்கும் சாதனையை முடித்துள்ளார். இதற்கு முன் 166 உலோக வெப்பமுள்ள மிளகுகளை சாப்பிடுதல், பிச்சை கேட்டு கோடீஸ்வரர் ஆவதற்கு முயற்சி செய்தல் போன்ற விதவிதமான லைஃப் ஸ்ட்ரிம்கள் மூலம் பிரபலமான இவருக்கு சமூக ஊடகங்களில் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Internet Hall Of Fame பதிவைப் பகிர்ந்துள்ளார் (@interneth0f_)