
பெரிய நகரங்களில் பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புகள் பரவலாக காணப்படும். அந்த வகையில் ஒரு அடுக்குமாடி கூறியிருப்பில் 30,000 பேர் வரை வசிக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?. ஆம் உண்மைதான். அதாவது இந்த கட்டிடம் சீனாவில் உள்ள ஹாங்சோ என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெயர் தி ரிகெண்ட இன்டர்நேஷனல் அப்பார்ட்மெண்ட் ஆகும்.
இந்த கட்டிடத்தை சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற சாண்டஸ் ஹோட்டலின் வடிவமைப்பாளரான அலிசியா லு என்பவர் வடிவமைத்துள்ளார். இந்த கட்டிடம் சுமார் 206 மீட்டர் உயரம் கொண்ட நிலையில் 2.6 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சின்ன அறைகளுக்கு இந்திய மதிப்பில் ரூ.18,000 வாடகை வசூலிக்கப்படுகிறது. அதன் பிறகு பெரிய அறைகளுக்கு 45,000 டாலர்கள் மாதம் வாடகையாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டிடம் கடந்த 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நிலையில் மொத்தம் 39 மாடிகள் உள்ளது. மேலும் இந்த கட்டிடத்தில் சுமார் 30,000 பேர் வரை வசித்து வருகிறார்கள்.