
உத்தரபிரதேச மாநிலத்தில் 4 வயது மகனை பெற்ற தாயே கழுத்தை அறுத்து கொன்ற கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் பிஜ்னோர் பகுதியில் வசித்து வருபவர் ஆதேஷ் தேவி. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு, நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
இந்த நிலையில், வேலைக்குச் சென்ற கணவன் வீடு திரும்பியதும், மகன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில், தாய் ஆகாஷ் தேவி, குழந்தையின் கழுத்தை அறுத்து, வீட்டில் இருந்த அடுப்பில் வைத்து மகனின் உடலை எரிக்க முயன்றது தெரியவந்துள்ளது.