பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கிருஷ்ணகிரிக்கு  வருகை தந்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 40 ஆண்டுகள் எந்த கட்சியும் கொண்டு வராத ரயில்வே திட்டங்களை கடந்த 9 ஆண்டுகளில் பாஜக கொண்டு வந்துள்ளது என கிருஷ்ணகிரி வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழகத்திற்கு பல புதிய திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். தமிழுக்கு முக்கியத்துவம் செலுத்தும் விதமாக திருவள்ளுவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது என்று புகழ்ந்து பேசினார்.