
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு கொடுக்கின்ற தகவல் அனைத்தும் பொய் செய்தி தான். உண்மையை சொல்வது கிடையாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட4000 கோடி வடிகால்வசதி திட்டம். இவர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் இல்லை.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு டெண்டர் விடுவதில் கோளாறு. கலெக்சன், கமிஷன், கரப்ஷன் அதிலேயே காலத்தை கடத்துறாங்க. துறையினுடைய அமைச்சர்… அப்புறம் இந்த மாநகரத்தில் இருக்கிற அமைச்சர்… இங்க இருக்கிற கவுன்சிலர்… எல்லாத்துக்கும் பங்கு பிரிப்பதற்கே நேரம் சரியா இருக்குது. இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால், தேங்கிய நீர் எளிதாக வெளியே போயிருக்கும். அதை எல்லாம் செய்யவில்லை. இதுதான் கோளாறு
தேங்கி இருக்கிற தண்ணீர் அகற்றுவதற்கு தேவையான நிதி இல்லை என்கிறார்கள். ஆனால் கார் ரேஸ் நடத்துவதற்கு 42 கோடி செலவு பண்றாங்க. ஏற்கனவே ஒரு இடத்துல மைதானம் இருக்குது. பிரமாண்டம் மைதானம் இருக்குது. அப்படி இருக்கும்போது சென்னை மாநகர மையப்பகுதியில் நடத்த வேண்டிய அவசியம் என்ன ? அந்த பணத்தை இந்த பாதிக்கப்பட்ட பகுதியில் தேங்கியிருக்கக்கூடிய நீரை அப்புறப்படுத்தியிருந்தால் நல்ல அரசாங்கம்.
எழுதாத பேனாவை 85 கோடி போட்டு நடுக்கடலில் வைக்கிறாங்க. யார் வீட்டு பணம். இரவு பகல் பாராமல் மக்கள் உழைத்து வரி செலுத்துகின்ற வரிப்பணத்தில் இவர்கள் விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டுமா ? சொந்த விளம்பரத்திற்காக இந்த பணத்தை ஊதாரித்தனமா செலவு பண்ணனுமா? இதெல்லாம் மக்கள் கேள்வி கேக்குறாங்க. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இதற்கெல்லாம் தகுந்த பதிலை மக்கள் கொடுப்பாங்க என தெரிவித்தார்.