
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை உக்ரைனில் நடந்த தாக்குதலால் 499 குழந்தைகள் உட்பட 10,749 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யா ட்ரோன்கள் மூலமாக உக்ரைன் – ருமேனியா எல்லை மார்க்கமாக ஓடும் டானுபே ஆற்றின் அருகில் இருக்கும் இஸ்மாயில் துறைமுகத்தை தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் 40 ஆயிரம் டன் தானியங்கள் சேதமாகி உள்ளதாகவும் துறைமுகத்தின் பெருமளவு கட்டமைப்பு சேதம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உக்கரனுக்கு நிகராக எந்த நாடுகளாலும் தானிய ஏற்றுமதி செய்ய முடியாது என்று அந்நாட்டின் துணைப் பிரதமர் ஒலக்ஸாண்டர் கூறியுள்ளார்.