
தனது ஐந்து வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வளர்ப்பு தந்தைக்கு கேரள நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
கேரளாவின் பத்தனம்திட்டாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது, அங்கு ஐந்து வயது சிறுமி 2021 இல் இறந்து கிடந்தார், அவரது உடலில் 67 காயங்கள் இருந்தன. இதுகுறித்து சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தாயின் இரண்டாவது கணவரான பாண்டியன் (26) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
அவர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த வாரம், பத்தனம்திட்டா கூடுதல் அமர்வு நீதிமன்றம், அவர் குற்றவாளி என அறிவித்து, நேற்று, மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் அவருக்கு 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.