சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-2024 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை அல்லது ரூபாய் 5000 வரை பெறலாம். இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி வசூலிக்க வீடு தேடி வரும் ஊழியர்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலமாக அமைந்துள்ள வரி வசூல் மையங்கள், ஆகியவற்றில் கடன், பற்று அட்டை, காசோலை, வரைவோலை மூலமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவும் வரியை செலுத்த வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து சேலம் மாநகராட்சி, கருப்பூர் மற்றும் அயோத்தியாபட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் சேலம் மாநகராட்சியில் 2000 ரூபாய் செலுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு செல்ல தக்க வகையில் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும். கழிவு நீரை மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் வெளியேற்ற வேண்டும். மேற்கூறிய நடவடிக்கைகளை கடைபிடிக்காமல் இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.