
திருநெல்வேலி மாவட்டம் அம்பை ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணைக்கு அழைத்து வரும் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கி அவர்களை சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவிட்டார். ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து, மாரி, செல்லப்பா, சுபாஷ், ரூபன் மற்றும் மாரி ஆகிய 6 பேரும் சாட்சி கொடுத்தனர். ஆனால் சூர்யா திடீரென பிறழ் சாட்சியாக மாறிவிட்டார்.
போலீசார் பிடுங்கியதில் தன் பற்கள் உடையவில்லை எனவும், கீழே விழுந்ததில் தான் பற்கள் உடைந்ததாகவும் சூர்யா கூறிய நிலையில் தற்போது சவுக்கு சங்கர் ஒரு பரபரப்பு தகவலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது சூர்யாவின் தாத்தா பாட்டியான பூதப்பாண்டி தேவர் மற்றும் ராமலட்சுமி ஆகியோர் பல்வீர் சிங் மீது கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் பெறும்படி தங்களுடைய பேரனை மிரட்டியதாகவும், வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டால் இனி சூர்யா மீது எந்த வழக்கும் பதிவு செய்ய மாட்டோம் என உறுதி கொடுத்ததோடு அவருக்கு 5 லட்ச ரூபாய் கொடுப்பதாக போலீசார் கூறியதாகவும் கூறியுள்ளதாக சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார். மேலும் சவுக்கு சங்கரின் இந்த பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sources : Boothapandi Thevar & Ramalakshmi Grand parents of Surya, the guy whose teeth was broken by Balveer Singh IPS say, police threatened their grandson to give a statement that he broke his teeth by falling down. If he gives such a statement, Surya would not be implicated… pic.twitter.com/cZPZPBCR4g
— Savukku Shankar (@SavukkuOfficial) April 1, 2023