இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்ற ஹிந்தி விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழ்நாட்டில் ஹிந்தியை திணிக்க எந்தவித முயற்சிகளும் செய்யவில்லை என்று கூறினார். அதன் பிறகு கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி நடந்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்தார். அதோடு ஹிந்தியை பிரிக்க நினைக்கும் முயற்சியில் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் கூறினார்.

இந்தியாவின் பலமான அங்கமாக தமிழ்நாடு இருக்கும் என்றும் அதனை யார் நினைத்தாலும் இந்தியாவிடம் இருந்து பிரிக்க முடியாது என்றும் கூறினார். மேலும் ஆளுநர் ரவி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாடுபட்டபோது அதில் திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தையை மட்டும் விட்டுவிட்டனர். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ள முதல்வர் ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் கட்சியின் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.