
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500 வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக 3வது டெஸ்டில் புதிய மைல் கல்லை எட்டினார் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். தனது 98 வது டெஸ்ட் போட்டியில் 500-வது விக்கெட் வீழ்த்தி அஸ்வின் புதிய சாதனை படைத்தார். சர்வதேச டெஸ்டில் அனில் கும்ப்ளேவுக்கு பிறகு 500 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் அஸ்வின். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் சாக் கிராலியை 500வது விக்கெட்டாக வீழ்த்தினார் அஸ்வின். சர்வதேச அளவில் டெஸ்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் படத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 21 டெஸ்டில் 98 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.
ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆனார். இலங்கையின் முத்தையா முரளிதரனுக்குப் பிறகு 100-க்கும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். ஆட்டத்தின் தொடக்கத்தில் அவர் ஒரு விக்கெட் மட்டுமே தொலைவில் இருந்தார், மேலும் சாக் கிராலியை 15 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்த பிறகு, ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் மைல்கல்லை எட்டினார். க்ராலி மற்றும் பென் டக்கெட் இடையேயான 90 ரன் தொடக்க பார்ட்னர்ஷிப்பை தமிழக பந்துவீச்சாளர் முறியடித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500 வது விக்கெட்டை வீழ்த்திய அஸ்வினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500 வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், சாதனைகளை முறியடித்து கனவுகளை உருவாக்குவது, சென்னையின் சொந்த பையன் அஸ்வின், ஒவ்வொரு திருப்பத்திலும், அவரது உறுதிப்பாடு மற்றும் தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது, இது ஒரு உண்மையான ஸ்பின்டாகுலர் மைல்கல்லைக் குறிக்கிறது! கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை சிறப்பாகப் பெற்ற அஸ்வினின் மாயாஜால சுழலுக்கு வாழ்த்துகள். எங்கள் சொந்த லெஜெண்ட்டுக்கு அதிக விக்கெட்டுகள் மற்றும் வெற்றிகள் இதோ!”என பதிவிட்டுள்ளார்.
Breaking Records & Crafting Dreams, that's Chennai's own boy, @ashwinravi99!
With every turn, he weaves a tale of determination and skill, marking a truly SPINtacular milestone!
Hats off to Ashwin's magical spin, masterfully securing his 500th Test wicket in the annals of… pic.twitter.com/5mSv3Wm5Rd
— M.K.Stalin (@mkstalin) February 16, 2024