
தமிழக அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் கல்விக்கான நிதியை விடுவிப்போம் என்று மத்திய பாஜக அரசு கூறியுள்ளது. ஆனால் மும்மொழி கல்வி கொள்கை மூலமாக ஹிந்தியை திணிக்க பாஜக அரசு முயற்சி செய்கிறது என்று திமுக அரசு குற்றம் சாட்டியதோடு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டது. அதன் பிறகு ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் திமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் தபால் நிலையங்களில் உள்ள பெயர் பலகையில் இருக்கும் ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழிக்கிறார்கள்.
இதற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் எச். ராஜா திமுகவினருக்கு தைரியம் இருந்தால் 500 ரூபாய் நோட்டுகளில் இருக்கும் ஹிந்தி எழுத்துக்களை முதலில் அழிக்க சொல்லுங்கள் என்று கூறினார். இதற்கு தற்போது எம்பி சு வெங்கடேசன் பதிலடி கொடுத்து ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, 500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால்விடுகிறார் ஹெச். ராஜா. ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு. சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம். அது தான் அறிவுடமை என்று பதிவிட்டுள்ளார்.
500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால்விடுகிறார் ஹெச். ராஜா.
ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு.
சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல.
காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்.
அது தான் அறிவுடமை.#மொழி_சமத்துவம்… pic.twitter.com/C3rnuQOTXv— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 25, 2025