
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு மூன்று மருத்துவக் கல்லூரியை மூடிட்டாங்க. இந்த ஆண்டு இன்னும் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. கிட்டத்தட்ட 500 பேர் மருத்துவர் ஆக கூடிய வாய்ப்பை இழந்துட்டோம். ஸ்டான்லி மருத்துவமனை வரலாற்று சிறப்புமிக்க மருத்துவமனை. அதை கூட சரியா நிர்வாகிக்காத அரசாங்கம் தான் விடியா திமுக அரசு. இதற்கு மக்கள் நல்வாழ்த் துறை அமைச்சர் எதாவது சப்ப கட்டு கட்டி பேசுவார்.
ஆனா என்ன எதிர்க்கட்சி சொல்றாங்க ? அதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து செய்யலாம் என்ற எண்ணமே கிடையாது. இன்னைக்கு 500 மாணவர்கள் சேர்க்கக் கூடிய வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்று வருத்தத்தோடு இந்த நேரத்துல தெரிவிக்கிறேன். இன்றைக்கு அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை கொண்டு வந்தோம்,இது எல்லாம் சாதனைகள்.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அந்த சாதனையை பார்க்க முடியாது. சாதனை இல்லாட்டியும் பரவால்ல… சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிற அரசு மருத்துவமனையை கவனிக்க வேண்டும். அது மட்டுமல்ல இந்த மருந்துகள் வாங்கறதுல கூட பல குளறுப்பிடி. முறையா வாங்குறது இல்ல, மருந்தில்லாமல் எப்படி மருத்துவமனை செயல்படும்? இப்படி பல பிரச்சனைகள் இருக்கின்றன .
இனியாவது கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து திராவிட மாடல் ஆட்சி… விடியா தி.மு.க அரசு மக்கள் படுகின்ற துன்பங்களையும், வேதனைகளையும் அகற்றப்பட வேண்டும். மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகளுக்கு உரிய முறையிலே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று இந்த நேரத்திலே ஊடகத்தின் வாயிலாக இந்த அரசுக்கு அறிவுறுத்துகிறேன் என தெரிவித்தார்.