சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தமிழக அரசால் 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் பெண் சிசுக்கொலையை ஒழிப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாக இருந்து வருகிறது. ஆண் குழந்தைகள் இல்லாத மற்றும் பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பம் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

பெண் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு சிவகாமி அம்மையார் நினைவுப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 50,000 முதலீடு செய்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு மூன்று வயது நிறைவு பெறும் முன் விண்ணப்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் போது முதிர்வு தொகை வழங்கப்படும்.