நாமக்கல் திருச்செங்கோட்டில் 51 வருடங்களுக்கு பின் தைப்பூச தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. விநாயகர் ஆறுமுகசாமி தேவசேனா தேரை வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதையடுத்து காவடி ஆட்டங்களுடன்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்பாக கடந்த 51 வருடங்களுக்கு முன் தைப்பூச தேரோட்டம் நிதி பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. அதன்பின் பக்தர்களின் பல ஆண்டு கோரிக்கைகு பின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அறநிலையத்துறை சார்பாக தைப்பூச தேரோட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டது.