
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரை அடுத்த கொத்தரி கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி (56). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கிராமத்திற்கு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த கிராமத்தில் வசித்து வந்த 10ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆகினார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயார் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் பழனிச்சாமியை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் நிலுவையில் இருந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட பழனிச்சாமிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கவும் உத்தரவிட்டார்.