
தெலுங்கானா மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி அதே ஊரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபரிடம் பேசிய நிலையில் காதல் ஆசை காட்டி மாணவியிடம் வாலிபர் பேச தொடங்கினார். இதனை நம்பி மாணவியும் வாலிபரிடம் பேச, இதனை பயன்படுத்தி சந்தோஷ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விஷயத்தை சந்தோஷ் தன் நண்பர்களிடம் கூறிய நிலையில் அவர்கள் நால்வரும் சேர்ந்து சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததோடு விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட 6 மாதங்களாக சிறுமியை வெளியில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதேபோன்று கடந்த 28ஆம் தேதி பள்ளி முடிந்து சென்ற சிறுமியை சந்தோஷ் தன் வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு அவர்களுடைய நண்பர்களும் இருந்தனர். பின்னர் அவர்கள் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் சிறுமி வீட்டிற்கு தாமதமாக சென்றார். இரவு நீண்ட நேரமாக ஆனதால் சிறுமியிடம் தாய் நடந்த விஷயங்களை கேட்க அவர் கதறி அழுது தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறினார். பின்னர் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 2 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வாலிபர்கள் ஐவரையும் போலீசார் போக்க சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.