கோவை மாவட்டத்தில் ஏங்கி வரும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கக்கூடிய மாணவி தன்னுடன் படிக்கும் ஸ்ரீதர்ஷன் என்ற மாணவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீதர்ஷன் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் தனது புகைப்படங்களை வைத்து மிரட்டி பாலியல் தொல்லை அளிப்பதாகவும் போலீசில் அந்த மாணவி புகார் அளித்துள்ளார். அதனைப் போலவே மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரும் புகார் அளித்த நிலையில் அந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மாணவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது இதுவரை அந்த கல்லூரியில் பெயரிலும் ஆறு பெண்களை அவர் காதலிப்பதாக கூறி நம்ப வைத்து ஏமாற்றியதும் பிறகு நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காட்டி பாலியல் தொல்லை அளித்ததும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.