திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டில் மொத்தம் 53 கொலைகள் நடந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பழிக்கு பழி மற்றும் முன்பிரோதம் என பலதரப்பட்ட காரணங்களால் இதுவரை 32 கொலைகள் நடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்காக தற்போது குற்றவாளிகளின் பட்டியலை மாவட்ட போலீசார் தயாரித்துள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக தமிழகம் முழுவதும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.