
கலைத் திருவிழாவில் மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க செய்யும் விதமாக ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு இரண்டு பாட வேளைகளில் கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாநிலத் திட்ட இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய கலை திறன்களை வெளிக்கொண்டு வருவதை ஒருங்கிணைக்கவும் கலையரங்க பயிற்சி மாணவர்களுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்டது.
அதேபோல இந்த வருடமும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலை பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கலை ஆசிரியர்களை பயன்படுத்தி இந்த பயிற்சி நடைபெற உள்ளது. வாரந்தோறும் இரண்டு பாடை வேளைகளில் கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். இதற்காக பிரத்தியேக கைப்பேசி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் இது குறித்த விவரங்கள் செயலியில் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.