
சென்னையில் பணத்திற்காக பெற்ற மகளையே பெற்றோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை வீடியோவாக எடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வந்துள்ளது. அதில் சிறுமிகளை ஆபாசமாக வீடியோக்களை எடுத்து ஒரு கும்பல் பணத்துக்காக சமூக வலைதளங்களில் விற்பனை செய்வதாக குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பெயரில் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், தன்னுடைய மனைவி மூலம் பணத்திற்காக தனது குழந்தையை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதை ரகசியமாக வீடியோ எடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் அந்தச் சிறுமியின் பெற்றோர்களை கைது செய்தனர். அதோடு சிறுமியின் தந்தை செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் அந்த சிறுமி மட்டுமல்லாது அவரது பள்ளி தோழிகள் 6 பேரையும் பாலியல் தொழில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. சிறுமிகளை மிரட்டி உல்லாசமாக இருந்ததாக வீடியோவில் இடம் பெற்றுள்ள 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 6 சிறுமிகளையும் காவல்துறையினர் கண்டு ரகசியமாக விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் மிரட்டப்பட்டு பாலியல் தொழில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இது அவர்களை இன்னும் அந்த அதிர்ச்சியின் பிடியிலிருந்து மீளாமல் இருந்ததால், காவல்துறையினர் மாணவிகளுக்கு மனரீதியாக தைரியம் கொடுக்கும் வகையில் கவுன்சிலிங் கொடுத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது இந்த பாலியல் வழக்கை நாங்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வழக்கு போல தான் பார்க்கின்றோம். அதனால் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்திய 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம். மேலும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்று அவர் கூறினார்.