
தேனி மாவட்டம் போடி மேட்டு சோதனை சாவடி அருகில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர்.
காரில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் இருவர் படுகாயம் அடைந்தனர். மேலும் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.