
60 வயதான பாஜக மூத்த தலைவர் திலிப் கோஷ் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளிந்துள்ளது. அவர் ரிங்கு மஜும்தார் என்ற பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். ரிங்கு பாஜகவில் நீண்ட காலமாக செயற்பட்டு வரும் உறுதியான பெண் தலைவி. பாஜக மகிளா மோர்ச்சா, OBC பிரிவு மற்றும் கைத்தறி பிரிவு உள்ளிட்ட பல பொறுப்புகளைச் செய்து வந்துள்ளார்.
ரிங்கு மஜும்தார் ஏற்கனவே விவாகரத்து செய்யப்பட்டவர் என்றும், சால்ட் லேக் பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் மகனும் இருப்பதாக ஹிந்துஸ்தான் செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஏப்ரல் 3ஆம் தேதி திலிப் கோஷ் ஈடன் கார்டனில் IPL போட்டி பார்க்க சென்றபோது, ரிங்குவும் அவரது பக்கத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரிங்கு திலிப் கோஷின் தாயார் புஷ்பலதா கோஷை நேரில் சந்தித்து திருமணத்தை ஒப்புக்கொள்ளச் செய்ததாக கூறப்படுகிறது.