
இந்தியாவின் அரசுடைமையான தொலைதொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் ஆகும். தற்போது பிஎஸ்என்எல் பல சிறப்பு திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி பிஎஸ்என்எல் சிறப்புமிக்க திட்டங்களில் ஒன்றுதான் வருடாந்திர திட்டம். அதாவது 1999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு உள்ளூர், ரோமிங் மற்றும் எஸ்டிடி குரல் அழைப்பு வசதிகளை பெறலாம். மேலும் தினமும் 100 குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும், 600 ஜிபி டேட்டா வசதியும் இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பெற முடியும். அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் ஒரு தீர்வாகவும் நீண்ட கால திட்டமாகவும் அமைகின்றது.