தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி மகாலட்சுமி 600-க்கு 598 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இவர் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் 99 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் வணிக கணக்குவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார். மேலும் அவருக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.