உலக அளவில் கால்பந்தாட்டத்தில் சிறந்த வீரர் என போற்றப்படும் லியோனல் மெஸ்ஸி அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் விருதுதான் “பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்”.

1963 ஆம் வருடம் முதல் இந்த விருது கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் இந்த விருதுக்கு பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருதை வழங்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது.

இதில் சில சூழ்நிலை காரணமாக மெஸ்ஸியால் பங்கேற்க முடியாமல் போய் உள்ளது. ஆனாலும் வெள்ளை மாளிகையை தொடர்புகொண்டு விருதுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கால்பந்தாட்ட வீரருக்கு இந்த விருது கொடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.