
கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை புரட்டி எடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் தமிழகத்திற்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனைப் போலவே மத்திய அரபிக் கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.