
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் இன்று மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பேட்டியில் கூறியதாவது, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெண் வாக்காளர்களை கவர்வதற்காக இந்த மது ஒழிப்பு மாநாட்டினை திருமாவளவன் நடத்துகிறார். திமுக அரசு 500 மது கடைகளை மூடுவேன் என்று கூறிவிட்டு ஆயிரம் மதுபான கிளப்புகளுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். இப்படி மதுவை ஆதரிக்கும் பிரதிநிதிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் அது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இது ஒரு மது ஒழிப்பு மாநாடா அல்லது மது விற்பனையாளர்கள், மது பிரியர்கள் மாநாடா என்று கேள்வி எழுப்பினார். இந்த வருடம் கள்ளக்குறிச்சியில் 65 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நிலையில் வெட்கமே இல்லாமல் 1700 கோடியை மது கடைகள் மூலமாக சம்பாதித்துள்ளனர். இதனை திமுக கூறியது மிகவும் வெட்கக்கேடான விஷயம். அதன் பிறகு மது ஒழிப்பு மாநாடு என்பது ஒரு அரசியல் மோசடி மற்றும் மக்களை ஏமாற்றுகிற வேலை. மேலும் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அறநிலையத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட கோவில் சீரமைப்பு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறினார்.