திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டியை சேர்ந்த ராமநாதன்(65) என்பவர் சித்த மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி 15 வருடங்களுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்து விட்டதால் ராமநாதன் மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் ராமநாதன் தனக்கு ஒரு துணை வேண்டும் என ஆசைப்பட்டார் அதற்காக இரண்டாவது திருமணம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்திருந்தார். அந்த விளம்பரத்தை பார்த்த ஒரு பெண் ராமநாதனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு என்னுடைய பெயர் கீதா(57) நான் சென்னையில் வசித்து வருகிறேன் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இருவரும் சிறிது நாட்களாக செல்போனில் பேசி வந்தனர். பின்பு திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்த கீதா ராமநாதனின் சென்னை வரும்படி அழைத்தார். சென்னைக்கு வந்த ராமநாதன் திருமணத்திற்கு 2 கிராம் தாலி, ஒரு கிராம் மெட்டி மற்றும் வெள்ளி மெட்டி, பட்டுப்புடவை என அனைத்தையும் வாங்கி கீதாவிடம் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து கீதா என் உறவினர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரை பார்த்துவிட்டு போகலாம் எனவும் ராமநாதனை அழைத்து சென்றுள்ளார். இருவரும் மருத்துவமனைக்கு சென்றபோது இராமநாதனை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்ற கீதா திரும்பி வரவே இல்லை.

அதனால் கீதாவின் போனுக்கு கால் செய்த ராமநாதன் அங்கு வேலை செய்யும் ஊழியர்களிடம் விசாரித்த போது அப்படி ஒருவர் இல்லை என கூறினர். தான் வாங்கி கொடுத்த நகை எல்லாம் எடுத்துவிட்டு கீதா ஓடிவிட்டார் என்பது ராமநாதனுக்கு தெரிய வந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமநாதன் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று கீதாவை கைது செய்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் கீதா இதே போன்று பல ஆண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் கீதாவிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.