அமெரிக்காவில் உள்ள வடக்கு டகோடாவில் டைனோசரின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறிவரும் நிலையில் 1360 கிலோ எடை, 25 அடி நீளம், 10 அடி கொண்ட டைனோசரின் எச்சம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறக்கும்போது 13 முதல் 15 வயதுடைய அந்த டைனோசர் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.