நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு நீண்ட நாட்கள் ஆக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களை இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக இருக்கும் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 67 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.