
திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான 411 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தன் மகன்கள் மூலம் மோசடியாக பறித்துள்ளதாக சென்னை அறப்போர் இயக்கம் அவர் மீது குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார் அனுப்பியது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக வெடித்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த நிலையில் சென்னை அறப்போர் இயக்கத்திற்கு 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன் பிறகு தவறான செய்தியை வெளியிட்டதற்காக 7 நாட்களில் சென்னை அறப்போர் இயக்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதை செய்யாவிடில் சென்னை அறப்போர் இயக்கம் மீது வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரித்துள்ளார்.