பிரபல வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான டெஸ்லா நிறுவனம் தற்போது வேலைக்காக ஆட்கள் எடுத்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ  தொழிலதிபர் எலான் மஸ்க்

அவர் இந்த வேலைக்கு மனிதர்கள் சுமார் 7 மணி நேரம் நடப்பது தான் முக்கியம் என அறிவித்துள்ளார். அவ்வாறு ஒரு நாளைக்கு 7 மணி நேரம் நடந்தால் (இந்திய மதிப்பிற்கு) ரூபாய் 28000 சம்பளமாக கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதற்கு 5’7 முதல் 5’11 வரை உயரம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து டெஸ்லா நிறுவனம் வாகனங்களை தயாரிப்பதை தவிர்த்து விட்டு தற்போது அதிநவீன அறிவியல் சாதனங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

அந்த வகையில் மனிதனைப் போல ரோபோக்களை டெஸ்லா நிறுவனம் தயாரித்ததுடன் அதற்கு மனிதர்கள் செய்யும் விஷயங்களை பழக்கி வருகிறார்.

இதன் காரணமாக மனிதர்கள் செயல்பாடுகளை ரோபோவுக்கு சுலபமாக சொல்லித் தரவே இந்த வேலை என அவர் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து மனிதர்களின் அசைவுகளை பிரதியடுக்கும் மோஷன் கேப்ச்யூர் சூட் உடையும் VR ஹெட் செட்டையும் அணிந்து கொண்டு இதன்மூலம் அசைவுகளை ஏற்படுத்தினால் அதை போல் ரோபோட்டும் செய்யும் என அவர் அறிவித்துள்ளார்.

இந்த வேலைக்கு அப்ளிகேஷன்கள் கலிபோனியாவின் பாலோ ஆல்டோவின் டெஸ்லா நிறுவன தலைமையகத்தில் குவிந்து வருகிறது.