ஒலிம்பிக்கில் 7 மாத கருவை சுமந்து கொண்டு களத்தில் நின்ற எகிப்து வீராங்கனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்புடன் நடந்து வருகின்றது. இந்த நிலையில் எகிப்தைச் சேர்ந்த வால் வீச்சு வீராங்கனை நடா ஹபீஸ் ஏழு மாதக்கருவை சுமந்து கொண்டு போட்டியில் களம் இறங்கியுள்ளார்.

ஆடு களத்தில் தனது எதிரணியை சேர்த்து மொத்தம் மூன்று பேர் இருந்ததாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த உலகத்தை இன்னும் காணாத தன் குட்டிக் குழந்தை என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். ஏழு மாத கருவை சுமந்து கொண்டு களத்தில் இறங்கிய எகிப்து வீராங்கனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.