
இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆன்லைன் திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் தேடி திருமணம் செய்கின்றனர். இந்நிலையில் இதன் மூலமாக வரன் தேடுவோர் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தவகையில் டெல்லியில் MNCல் பணிபுரியும் பெண் ஒருவர், பெற்றோருடன் சேர்ந்து மேட்ரிமோனியில் தனக்கு வரன் தேடி வந்துள்ளார்.
அதில் HR ஊழியர் ஆண்டுக்கு 370லட்சம் வருமானம் வருவதாக இருந்த ப்ரோபைலுக்கு விருப்பம் தெரிவித்து பேசியுள்ளார். எதிரில் பேசியவரோ தன்னை பெரும் பணக்காரராக காட்டி கவர்ந்ததோடு, மலிவு விலையில் IPhone வாங்கி தருவதாக 73 லட்சம் பெற்றுவிட்டு காணாமல் போனார். பின்னரே, தான் ஏமாந்ததை அப்பெண் உணர்ந்துள்ளார்.