
கேரள மாநிலம் கஞ்சிக்குழி பகுதியில் சன்னிஸ்கரியா(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்கிறார். இந்நிலையில் அதே பகுதியில் 7 ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அந்த மாணவியை கூலி தொழிலாளியான சன்னிஸ்கரியா கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த தகவல் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சன்னிஸ்கிரியாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.