நடிகர் விஜய்சேதுபதி விடுதலை திரைப்படத்தின் அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். அசுரன் திரைப்படத்துக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக கொண்டு “விடுதலை” என்ற தலைப்பில் புது படத்தை இயக்கி வந்தார்.  இந்த படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளனர். 2 பாகங்களாக வெளியாகும் விடுதலை படத்தின்  முதல் பாகத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகியது.

இந்த நிலையில் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது “விடுதலை திரைப்படத்தில் 8 நாள் நடித்தால் போதும் என வெற்றிமாறன் என்னை கூப்பிட்டார். எனினும் 8 நாட்களும் போட்டோ எடுத்து என்னை ஏமாற்றி விட்டார். ஆடுகளம் இசைவெளியீட்டு விழாவில் பார்வையாளராக அமர்ந்து இருந்தேன். அதனை தொடர்ந்து அவர் இந்த படத்திற்குதான் இசைவெளியீட்டு விழா வைத்திருக்கிறார். விடுதலை மேடையில் நான் இருக்கிறேன் என்று நினைக்கும்போது அற்புதமாக இருக்கிறது. அவருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி” என்று கூறினார்.