இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை 6 மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் கூட்டு பலாத்காரம் செய்ததுடன் அவரை கொலை செய்து கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நந்தியால் மாவட்டத்தை சேர்ந்த மாணவியை விளையாடலாம் என்று கூறி அழைத்துச் சென்ற சிறுவர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில் சிறுமியின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.