
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 24 வயதான ஆட்டம் விக்டோரியா ஹார்பர் என்பவர், அவருடைய 8 மாதக் குழந்தை ஸ்டெர்லிங் ராட்ஜர்ஸை கொன்றதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் செய்த தொடர் தொந்தரவால் குழந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
முதலில் ரிவர்சைட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை, பின்னர் நியூ ஓர்லீன்ஸ் குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. ஆனால், மார்ச் 17 அன்று குழந்தை உயிரிழந்தது. மருத்துவ பரிசோதனையில், தலையில் முறிவுகள், உடலில் பலத்த எலும்பு முறிவுகள் என இடுப்பு, கை, கால் உட்பட பல இடங்களில் கொடூரமான காயங்கள் காணப்பட்டன.
பிராங்க்ளின்டன் போலீஸ் அதிகாரி ஜஸ்டின் பிரவுன், இது தன்னுடைய காவல்துறை அனுபவத்தில் சந்தித்த மிக மோசமான வழக்காக இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், குழந்தை அழும்போது வாயை மூடிச் சித்ரவதை செய்ததாக ஹார்பர் ஒப்புக்கொண்டுள்ளார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான சில அறிகுறிகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.