
அரசு ஊழியர்கள் மத்திய அரசிடம் 3 முக்கிய கோரிக்கைகளை விடுத்தது வருகின்றனர். அதாவது, கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படியின் நிலுவைத்தொகையை அளிக்கவேண்டும், தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 8-வது ஊதியக்குழுவை கொண்டு வரவேண்டும் போன்றவை இந்த முக்கிய கோரிக்கைகளாகும்.
தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இது உத்தரவாத ஓய்வூதியம் கிடைப்பதற்குரிய வழிவகைகளையும் அரசு மும்முரமாக செய்து வருகிறது. இதேபோன்று அரசு ஊழியர்களை மகிழ்விக்க 8-வது ஊதியக் குழுவையும் கொண்டுவரும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 8-வது ஊதியக்குழுவை நாடு முழுவதும் அரசாங்கம் விரைவில் 2023 ஆம் வருடத்திலேயே அமல்படுத்தலாம் என்ற ஊகங்கள் வெளியிடப்படுகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 8-வது ஊதியக்குழுவுக்கு மோடி அரசாங்கமானது விரைவில் கிரீன் சிக்னல் கொடுக்கலாம்.
2013ல் 7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டு 2016-ம் வருடம் நடைமுறைபடுத்தப்பட்டது. அதன்பின் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்பட்டது. இப்போது மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையிலும் இருக்கிறது. புது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்தபின், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயரும்.
அத்துடன் ஃபிட்மெண்ட் ஃபாக்டரும் உயரலாம். 8-வது ஊதியக்குழு நடைமுறைக்கு வந்தால், இந்த முறை ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்கு அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதனை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளமானது 44.44% அதிகரிக்கப்படும். இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் 18 ஆயிரத்திலிருந்து 26 ஆயிரமாக உயரும். புது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 10 வருடங்களுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.