
சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டையில் 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்தச் சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஆங்கில வகுப்பு ஆசிரியை வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக் கூறி பிரம்பால் சிறுமியை அடித்ததாக தெரிகிறது. இதனால் சிறுமியின் கைகள் மற்றும் காதில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களது மகளை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.